கோலாலம்பூர், டிசம்பர்.30-
அலோர் ஸ்டார், சுல்தான் அப்துல் ஹாலிம் விமான நிலையத்தின் ஓடுபாதையில் இன்று மதியம் விமானம் ஒன்றில் ஏற்பட்ட விபத்து காரணமாக அது தற்காலிகமாக மூடப்பட்டது.
இன்று மதியம் 2.40 மணியளவில், கோலாலம்பூரை நோக்கிச் சென்ற போயிங் 737 விமானத்தின் டயரானது ஓடுபாதையில் திடீரென வெடித்ததையடுத்து, இந்நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை, மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமைச் செயலதிகாரி டத்தோ கேப்டன் நொராஸ்மான் மாஹ்முட் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, ஓடுபாதையானது ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், இரவு 7.30 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








