Dec 2, 2025
Thisaigal NewsYouTube
எல்.சி.எஸ். போர்க்கப்பல் கொள்முதல் ஊழல் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துவீர்அரசாங்கத்திற்கு மூடா கட்சி கோரிக்கை
தற்போதைய செய்திகள்

எல்.சி.எஸ். போர்க்கப்பல் கொள்முதல் ஊழல் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துவீர்அரசாங்கத்திற்கு மூடா கட்சி கோரிக்கை

Share:

பல கோடி வெள்ளி ஊழல் நடந்து இருப்பதாக கூறப்படும் எல்.சி.எஸ். போர்க்கப்பல் கொள்முதல் தொடர்பிலான விசாரணையை தீவிரப்படுத்துமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை மூடா கட்சிக்கேட்டுக்கொண்டுள்ளது.

அதேவேளையில் 900 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட 6 போர்க்கப்பல் கொள்முதலில் முறைகேடு நிகழ்ந்து இருப்பதாக பிஎசி எனப்படும் தேசிய தலைமைக் கணக்காய்வுக்குழு அம்பலப்படுத்தியுள்ள நிலையில அதன் மீதான விசாரணையை துரிதப்படுத்தாமல், புதிய நிறுவனத்தின் வாயிலாக 5 எல்.சி.எஸ். போர்க்கப்பல்களை 1,120 கோடி வெள்ளி செலவில் வாங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை மூடா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மூடா கட்சியின் “எங்கே எல்.சி.எஸ். போர்க்கப்பல்” நடவடிக்கைக்குழு ஏற்பாட்டில் இன்று நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகில் தேசிய நினைவுச்சின்ன பூங்காவில் பிஎசி நடவடிக்கைக்குழுத் தலைவர் டத்தோ மாஸ் எர்மியாதி சம்சுடினிடம் மகஜர் வழங்கும் நிகழ்வில் மூடா கட்சி மூன்று முக்கிய கேள்விகளை முன்வைத்துள்ளது.

மேலும் “எங்கே எல்.சி.எஸ். போர்க்கப்பல்” என்ற தலைப்பில் கடந்த ஆண்டு ஆகட்ஸ்ட் 18 ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான், சோகோ கட்டத்திற்கு அருகில் மூடா கட்சி முன்னெடுத்த அமைதி பேரணி தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமிர் ஹரிரி அப்துல் ஹடிக்கு எதிரான நீதிமன்ற வழக்கை அரசாங்கம் மீட்டுக்கொள்ள வேண்டும் என்று அந்த மகஜரில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அமிர் ஹரிரி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது, முந்தைய அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் செயலாகும் என்று மூடா கட்சி வர்ணித்துள்ளது.

மகஜர் வழங்கும் இந்நிகழ்வில் அமிர் ஹரிரி, மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டாக்டர் ரா.சிவபிரகாஷ் உட்பட முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related News