Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தப்பி ஓடிய நால்வர் - பெண் கைது, மூவர் தேடப்படுகிறார்கள்
தற்போதைய செய்திகள்

தப்பி ஓடிய நால்வர் - பெண் கைது, மூவர் தேடப்படுகிறார்கள்

Share:

ரெம்பாவ், ஜன - 8,

ரெம்பாவ், கம்போங் ரெலோங்கில் இல் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது காவல் துறையின் ரோந்து பிரிவிடம் இருந்து மூவர் தப்பி ஓடிய நிலையில், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகிக்கும் வகையில் புரோட்டோன் வீரா வகை காரின் செயல்பாடுகள் இருந்த நிலையில், அதனை நிறுத்த போலீஸ் முற்பட்டது. அவர்களிடம் சிக்காமல் தப்பிக்க கார் வேகமாக செலுத்தப்பட்டது, அந்தக் கார் இறுதியில் வழி யில்லாத முட்டுச் சந்தை அடைந்தது. தப்பிக்க வழி இல்லாத நிலையில், வந்த வழியிலேயே தப்பிக்கும்போது, போலீஸ் வாகனத்தை மோதித் தள்ளியது.

பாதையில் இடது புறத்தில் விழுந்த அந்த புரோட்டோன் வீரா காரில் இருந்து மூவர் தப்பித்த நிலையில், ஒரு பெண் மட்டும் கைது செய்யப்பட்டார் என ரெம்பாவ் போலீஸ் தலைவர் ஹஸ்ரி முகம்மட் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அந்த பெண்மணியின் வயது 31 எனவும் தேடப்பட்டு வரும் மூவரில் இருவருக்கு முறையே 26 மற்றும் 31 வயது எனத் தெரிவிக்கப்பட்டது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்