Sep 30, 2026
Thisaigal NewsYouTube
கேமரன் மலை–சிம்பாங் பூலாய் சாலையில் கார் விபத்து: 4 சிங்கப்பூரர்கள் காயம்
தற்போதைய செய்திகள்

கேமரன் மலை–சிம்பாங் பூலாய் சாலையில் கார் விபத்து: 4 சிங்கப்பூரர்கள் காயம்

Share:

கேமரன் மலை–சிம்பாங் பூலாய் சாலையில் கம்போங் பெர்கோம் அருகே இன்று கார் சறுக்கி கால்வாயில் விழுந்ததில் நான்கு சிங்கப்பூரர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் 19, 20 மற்றும் 21 வயதுடைய மூன்று ஆண்கள், 21 வயதுடைய பெண் என பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தெரிவித்தது.

அவர்களில் மூவர் சொற்ப காயங்களுடன் பொதுமக்களால் காரிலிருந்து மீட்கப்பட்டனர். ஓட்டுநர் இருக்கையில் சிக்கியிருந்த 20 வயது ஆடவரை தீயணைப்பு வீரர்கள் சிறப்பு மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி மீட்டனர். அவரது காலில் சிறிய காயம் ஏற்பட்டது.

நால்வருக்கும் சம்பவ இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Related News