ஜொகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத்தேர்தல்களில் 3ஆர் விவகாரத்தை அரசியல் கட்சிகள் தொடக்கூடாது என்று போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் எச்சரித்துள்ளார்.
இனம், மதம் மற்றும் ஆட்சியாளர் என மூன்று அம்சங்களை உள்ளடக்கிய 3ஆர் விவகாரத்தை தேர்தல் பரப்புரை காலத்தில் எந்தவொரு அரசியல் கட்சியும் பயன்படுத்துமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜஜிபி நினைவுறுத்தினார்.
இடைத்தேர்தல் நடைபெறும்போது மக்களிடையே நல்லிணக்கம் சீர்குலைக்கப்படுவது தடுக்கப்படுவதற்காகவே இந்த எச்சரிக்கையைப் போலீஸ்துறை விடுப்பதாக ரஸாருதீன் தெளிவுப்படுத்தினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


