Sep 12, 2026
Thisaigal NewsYouTube
லாரியைத் தவிர்க்க முயன்ற சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்தது — மூவர் காயம்
தற்போதைய செய்திகள்

லாரியைத் தவிர்க்க முயன்ற சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்தது — மூவர் காயம்

Share:

சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் நோக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, லாரியைத் தவிர்க்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் மூன்று பயணிகள் மற்றும் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி காயமடைந்தனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 5 மணியளவில் வடக்கு–தெற்கு நெடுஞ்சாலையின் 177.6-ஆவது கிலோமீட்டரில், வடக்கு நோக்கிய பகுதியில் மலாக்கா, ஜாசின் அருகில் நிகழ்ந்தது.

பேருந்தில் 11 பயணிகள் இருந்ததாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டன் லீ ராபர்ட் தெரிவித்தார்.

முன்னால் சென்ற லாரி வேகத்தைக் குறைத்த போது, 31 வயது பேருந்து ஓட்டுநர் அதைத் தவிர்க்க முயன்றதில் பேருந்து சாலையை விட்டு விலகி கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த 62 வயது பெண்ணும், பிரிட்டனைச் சேர்ந்த 46 வயது பெண்ணும் தலையில் காயமடைந்தனர். 59 வயதான உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி காலில் காயமடைந்தார்.

மேலும் எட்டு பயணிகளும் பேருந்து ஓட்டுநரும் காயமின்றி தப்பினர். பேருந்து ஓட்டுநருக்கு போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்