கோல பிலா, அக்டோபர்.08-
நெகிரி செம்பிலானில் நேற்று இரவு மரம் சரிந்து, கார் ஒன்றின் மீது விழுந்ததில், 38 வயதான ஆடவர் உடல் நசுங்கி பலியானார்.
ஜாலான் சவா லேபார் – சுங்காக் சாலையில், இரவு 11.30 மணியளவில், இச்சம்பவம் நடந்ததாக கோல பிலா காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் முகமட் முஸ்தஃபா ஹுசேன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் மரணமடைந்த ஆடவர், நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமயப் பேரவையைச் சேர்ந்த அதிகாரி முகமட் நவாவி ஹுசேன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987, பிரிவு 41(1)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.








