பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களை பகடி வதைக்கு உள்ளாக்கும் சம்பவங்களை கையாள ஒரே மாதிரியான தேசிய அளவிலான நடைமுறை தேவை என முன்னாள் துணைக் கல்வி அமைச்சர் பி. கமலநாதன் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் இரண்டாம் படிவ மாணவர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தற்போது கல்வி, உயர்கல்வி மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் தனித்தனி நடைமுறைகளைப் பின்பற்றுவதாக குறிப்பிட்ட கமலநாதன், நாடு முழுவதும் ஒரே மாதிரியான தடுப்பு நடைமுறை கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் புகார் கிடைத்த 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை தொடங்கவும், 7 நாட்களுக்குள் விசாரணையை முடிக்கவும், 14 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவும் தெளிவான காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.








