கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி வெற்றி பெற்ற கோலத்திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் முடிவை தேர்தல் நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து அத்தொகுதியின் இடைத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் அறிவித்துள்ளது. கிளந்தான், திரெங்கானு உட்பட 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் அதே தேதியில் கோலத்திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலும் நடைபெறும் என்று எஸ்பிஆர் தலைவர் தான் ஶ்ரீ அப்துல் கானி சாலெஹ் தெரிவித்துள்ளார்.
அந்த ஆறு மாநிலங்களுக்கான வேட்மனுத்தாக்கல் நடைபெறும் ஜுலை 29 ஆம் தேதி கோலத்திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதி வேட்புமனுத்தாக்கலும் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கோலத்திரெங்கானு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளரகளுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டதில் அத்தேர்தல் முடிவை கடந்த ஜுன் 27 ஆம் தேதி கோலத்திரெங்கானு தேர்தல் நீதிமன்றம் ரத்து செய்வதாக தீர்ப்பு அளித்தது.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது


