Sep 30, 2026
Thisaigal NewsYouTube
விலங்கு மின்கம்பியைத் தொட்டதால் இடிஎஸ், கேடிஎம் ரயில் சேவைகள் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

விலங்கு மின்கம்பியைத் தொட்டதால் இடிஎஸ், கேடிஎம் ரயில் சேவைகள் பாதிப்பு

Share:

பாத்தாங் பெனார்–லாபு இடையே 25 கிலோ வோல்ட் உயர்நிலை மின்கம்பி ஒன்று துண்டிக்கப்பட்டதால், இன்று காலை 6.24 மணி முதல் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் சேவைகள் பாதிக்கப்பட்டன.

விலங்கு ஒன்று மின்கம்பி மற்றும் நிலக் கம்பியை ஒரே நேரத்தில் தொட்டதால் மின்கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என கேடிஎம்பி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் சில இடிஎஸ் ரயில்கள் சிரம்பான் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, பயணிகள் பேருந்துகள் மூலம் அடுத்த நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும், பத்து கேவ்ஸ்-பூலாவ் செபாங் வழித்தட கேடிஎம் கொமுட்டர் சேவைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு, காஜாங் மற்றும் பாங்கி நிலையங்களில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்த இடையூறு காரணமாக பயணத்தைத் தொடர விரும்பாதவர்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு முழுக் கட்டணத் தொகையும் திருப்பி வழங்கப்படும் என கேடிஎம்பி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தொழில்நுட்பக் குழுவினர் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், பணிகள் சுமார் 3 மணி நேரத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News