Mar 28, 2026
Thisaigal NewsYouTube
சுற்றுலா அமைச்சரிடம் மலேசிய குடிநுழைவுத்துறை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்”
தற்போதைய செய்திகள்

சுற்றுலா அமைச்சரிடம் மலேசிய குடிநுழைவுத்துறை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்”

Share:

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 20-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் KLIA ஒன்றில், கடந்த ஆண்டு ஜுன் மாதம் சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் தியோங் கிங் சிங்- கிடம் மிக மோசமாக நடந்து கொண்டதற்காக மலேசிய குடிநுழைவுத்துறை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மத்தியில் லஞ்ச ஊழல் நிலவுவதாக குற்றஞ்சாட்டி, குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்ட சீன நாட்டுப் பெண்மணியை காப்பாற்றுவதற்கு விமான நிலையத்திற்குள் நுழைந்த சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் தியோங் கிங் சிங்- தங்கள் பணியில் குறுக்கிட்டதாக குடிநுழைவுத்துறை, அன்று பகிரங்கமாக குற்றங்சாட்டியது.

விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த அந்த சீன நாட்டுப்பிரஜையை மீட்பதற்கு குடிநுழைவு அதிகாரிகள் மூவாயிரம் வெள்ளி வரையில் லஞ்சம் கேட்டதாகவும், அந்தப் பெண் மறுபடியும் தாயகத்திற்கு திரும்ப வேண்டுமாானல் மேலும் மூவாயிரம் வெள்ளி லஞ்சமாக கேட்டதாக அமைச்சர் தியோங் கிங் சிங்- பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆனால், அன்று அமைச்சர் அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்ட எடுபடவில்லை. அவர் குடிநுழைவு அதிகாரிகளின் பணியில் வேண்டுமென்றே தலையிட்டதைப்போல் படம் பிடித்து காட்டப்பட்டது. மோசமாக சித்தரிக்கப்பட்டது.

ஆனால், விமான நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க உயர் அதிகாரி ஒருவர் மற்றும் 49 குடிநுழைவுத்துறை அதிகாரிகள், மலேசிய ஊழல்தடுப்பு ஆணைத்தினால் ல ஞ்ச ஊழலில சிக்கியிருப்பதாக அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசம் பாக்கி பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் குடிநுழைவு அதிகாரிகள் மத்தியில் லஞ்ச ஊழல் நிலவியிருப்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, தங்களின் இயலாமைக்காக அமைச்சர் தியோங் கிங் சிங்- கிடம் மலேசிய குடிநுழைவுத்துறை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெப்போங் எம்.பி. லிம் லிப் இன்ஜி இன்று வலியுறுத்தியுள்ளார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை