கோலாலம்பூர், ஜூலை.31-
மலேசியர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான 13 ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
நாட்டின் பத்தாவது பிரதமர் என்ற முறையில் மலேசியாவை 2026 ஆம் ஆண்டு முதல் 2030 ஆண்டு வரை முன்னெடுத்துச் செல்லும் திட்டங்களை உள்ளடக்கிய இந்த ஐந்து ஆண்டு பிரதானத் திட்டத்தை மடானி அரசாங்கத்தின் தலைவர் என்ற முறையில் டத்தோ ஶ்ரீ அன்வார் தாக்கல் செய்து, நாடாளுமன்றத்தில் உரையாடத் தொடங்கினார்.
அதிகரித்து வரும் வருமானம், நிலையான பொருளாதார கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை இந்த 13 ஆவது மலேசியத் திட்டம் உள்ளடக்கியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.








