ஷா ஆலாம், ஆகஸ்ட்.01-
சிலாங்கூர், காப்பார் நகரில் உள்ள ஒரு ஸ்நூக்கர் மையத்தில் பாராங் ஏந்திய கும்பல் ஒன்று கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் ஆறு நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது.
நேற்று இரவு 7 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள வேளையில், அந்த ஆறு நபர்களையும் போலீசார அடையாளம் கண்டு வருவதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ். விஜயராவ் தெரிவித்தார்.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்ததாக நம்பப்படும் 6 ஆடவர்களில் மூவர், வெளியே காத்திருக்க, இதர மூவர் பாராங் ஏந்திய நிலையில் இந்தக் கொள்ளையை நடத்தியுள்ளனர் என்று விஜயராவ் குறிப்பிட்டார்.
ஸ்நூக்கர் மையத்தில் இருந்தவர்களிடம் 823 ரிங்கிட்டை இந்தக் கும்பல் பறித்துச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று விஜயராவ் தெரிவித்தார்.








