May 22, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தது பல்லூடக ஆணையம்
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தது பல்லூடக ஆணையம்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 04-

தற்போது சர்ச்சைக்கு இடமாக மாறியுள்ள இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோவின் கணவர் ராமச்சந்திரன் முனியாண்டி சம்பந்தபட்ட Asia Mobility Technologies Sdn Bhd. நிறுவனம் தொடர்பாக முகநூலில் பதிவேற்றம் செய்யப்படும் கருத்துகள், தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் உத்தரவு பேரில் அகற்றப்படுவதாக கூறப்படுவதை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் மறுத்துள்ளது.

சமுதாய வழிகாட்டல் மீறப்படும் அல்லது உண்மைக்கு புறப்பாக கூறப்படும் அல்லது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் கருத்துகள் என்று வகைப்படுத்தப்படும் பதிவேற்றங்கள் மட்டுமே அகற்றப்படுவதாக தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளது.

ஹன்னா இயோவின் கணவர் சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பில் முகநூலில் தாம் பதிவேற்றம் செய்த கருத்துகள் அகற்றப்பட்டு விட்டதாக பினாங்கை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ள புகார் தொடர்பில் அந்த ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Related News