சிரம்பான், டிசம்பர்.06-
சமூக மேம்பாட்டு இலாகாவான கெமாஸ் ஏற்பாட்டில் ஒரு தபிக்கா பாலர் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இறுதியில் சோகத்தில் மூழ்கியது.
சிரம்பான், லெங்கேங், Taman Senangin- னில் உள்ள Mahkota Hillsn Club House- சில் நடைபெற்ற நிகழ்ச்சின் போது அருகில் உள்ள குளத்தில் 5 வயது சிறுமி நீரில் மூழ்கி மரணமுற்றதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை மதியம் 12.15 மணியளவில் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.








