Jul 31, 2026
Thisaigal NewsYouTube
30 வெள்ளிக்கு எம் சி : அறுவர் கைது !
தற்போதைய செய்திகள்

30 வெள்ளிக்கு எம் சி : அறுவர் கைது !

Share:

காஜாங்கில், போலியான விடுமுறைச் சான்றிதழ் - எம் சி யை விற்றதாக நம்பப்படும் 4 பெண்களையும் இரு ஆடவர்களையும் காவல் துறை தடுத்து வைத்துள்ளது என அம்மாவட்டக் காவல் துறை தலைவர் முஹமாட் சேய்ட் ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

கடந்த வெள்ளி, சனிக் கிழமைகளில் காஜாங்கின் பல்வேறு பகுதிகளில் 26 வயது முதல் 51 வயதுக்குட்பட்ட அந்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

“Semua கடந்த ஓராண்டாக, 30 வெள்ளி முதல் 50 வெள்ளி வரையில் விடுமுறைச் சான்றிதழ்களை அவர்கள் விற்பனை செய்து வருவதாகவும் இதன் தொடர்பில் மடிக்கணினி, 8 கைப்பேசிகள், 5 விரலிகள், விடுமுறைச் சான்றிதழ் புத்தகம், 171 அரசாங்க விடுமுறைச் சான்றிதழ்கள், 70 தனியார் விடுமுறைச் சான்றிதழ்கள், கிளினிக்குகளின் 13 அதிகாரப்பூர்வ இரசீதுகள் ஆகியவற்றைக் காவல் துறை பறிமுதல் செய்துள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் இன்று புதன்கிழமை வரை அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது என சேய்ட் ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

Related News