கோத்தா கினபாலு, ஆகஸ்ட்.03-
சுலவேசி கடல் எல்லைப் பிரச்சனை குறித்து சபா மாநில அரசு சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவும் எடுக்கப்படாது என பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிரடியாக உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோவுடன் நடந்த பேச்சு வார்த்தையில், சபா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர், சரவாக் மாநில பிரீமியர் டான் ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓபேங் ஆகியோரை உடன் அழைத்துச் சென்று சபாவுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கியதாக அவர் சுட்டிக் காட்டினார்.
1982 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கடல் சார் சட்டம், வரலாறு, சபா மாநில அரசின் ஒப்புதல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என அன்வார் பகிரங்கமாக அறிவித்து, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.








