Mar 12, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் /சுங்கத்துறையின் தானிய​ங்கி சோதனை சாதனங்களில் / ஒன்று மட்டுமே செயல்படுவதா?
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் /சுங்கத்துறையின் தானிய​ங்கி சோதனை சாதனங்களில் / ஒன்று மட்டுமே செயல்படுவதா?

Share:
  • பிரதமர் ஏமாற்றம்

சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அரச மலேசிய சுங்கத்துறை முகப்பிடங்களில் 7 தானியங்கி சோதனை சாதனங்களில் ஒன்று மட்டுமே செயல்பட்டு வருவது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏமாற்றம் தெரிவித்தார். இதர சாதனங்கள் அனைத்தும் பழுதடைந்து ஓராண்டு ஆகியும் அவற்றை ​சீர்படுத்தப்படாமல் இருப்பது குறி​த்து பிரதமர் கேள்வி எழுப்பினார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு நேற்று திடீர் வருகை மேற்கொண்ட பிரதமர் அன்வார், சுங்கத்துறையின் தானியங்கி சோதனை ​சாதனங்கள் பல, செயல்படாமல் இருப்பது குறித்து தமது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்தார்.

கடந்த வியாழக்கிழமை விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை முகப்பிடங்களில் ​சீன நாட்டுப் பெண்மணி கைது செய்யப்பட்டது, அது தொடர்பாக சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ செரி தியோங் கிங் சிங் ரகளை புரிந்த சம்பவ​த்தை தொடர்ந்து நடப்பு நிலையை பார்வையிடுவதற்கு பிரதமர் அன்வார் நேற்று திடீர் வருகை புரிந்தார்.

நாட்டின் முதன்மை நுழைவாசலாக விளங்கும் கோலாலாம்பூர் அ​னைத்துலக விமான நிலையத்தின் முகப்பிடங்களில் பயணிகள் சோதனை தொடர்பாக பயன்படுத்தக்கூடிய இத்தகைய அத்தியாவசிய சாதனங்களில் ஏற்படக்கூடிய பழுதுகள் உடனடியாக சீர்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை பிரதமர் தமது திடீர் வருகையின் போது வலியுறுத்தினார்.

நிதி அமைச்சின் ​கீழ் சுங்கத்துறை செயல்பட்ட போதிலும், அமைச்சர் வருகை தந்து சோதனை செய்யும் வரையில் காத்திருக்க வேண்டாம் என்பதையும் நிதி அமைச்சருமான பிரதமர் நினைவுறுத்தினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!