Oct 14, 2026
Thisaigal NewsYouTube

நோன்பு மாதத்தில் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்பலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

புத்ராஜெயா, பிப்.28-

நோன்பு மாதத்தில் அரசாங்க ஊழியர்கள், தங்கள் ஓய்வு நேரத்தை அரை மணி நேரம் குறைத்துக் கொள்வார்களேயானால் அவர்கள் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று அரசாங்கப் பேச்சாளர் ஃபாமி ஃபட்சீல் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு விருப்புரிமைகள் கொண்ட நெகிழ்வான வேலை நேர விதிமுறைகள் உத்தரவு அடிப்படையில் இவ்விவகாரம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சரான ஃபாமி குறிப்பிட்டார்.

விருப்புரிமை A பிரிவின் கீழ் அவர்கள் தங்கள் வழக்கமான வேலை நேரத்தை நிலைநிறுத்திக் கொள்ளலாம். விருப்புரிமை B, தங்களின் ஓய்வு நேரத்தை 30 நிமிடம் குறைத்துக் கொண்டு, வேலை முடிவுறுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்னதாகவே புறப்படுவதற்கு வகை செய்வதாக ஃபாமி விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

இவானா ஸ்மித் மரண வழக்கில் திடீர் திருப்பம்: 1.1 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு தீர்ப்பை இரத்து செய்தது அப்பீல் நீதிமன்றம்

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

‘அலி பாபா’ நடைமுறைகளைக் குற்றமாகக் கருத அரசாங்கம் திட்டம் / சட்டமாக்க ஆலோசனை

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

சபாவில் அதிகாரியைத் தாக்கி கடலில் மூழ்கடிக்க முயன்ற சந்தேக நபர் – எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

ஜப்பானில் போதைப் பொருட்களுடன் சிக்கிய மலேசியர்கள்: தனிப்படை அமைக்கிறது புக்கிட் அமான்

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு

2030-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க மலேசியா இலக்கு