Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மாணவர்களுடன் வாகனத்தை எடுத்த நபர் கைது
தற்போதைய செய்திகள்

மாணவர்களுடன் வாகனத்தை எடுத்த நபர் கைது

Share:

ஆறு மாணவர்கள் அமர்ந்திருந்த காரை, எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயற்சி செய்த நபரை போ​லீசார் வளைத்துப் பிடித்தனர். இந்த சம்பவம் நேற்று மாலையில் சபா, ரானாவ், குன்டங்சாங் - னில் நிகழ்ந்தது. மாணவர்களுடன் நிறுத்தப்பட்டு இருந்த காரை எடுத்துக்கொண்டு அந்த நபர் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றதை பொதுமக்கள், போ​லீசாருக்கு தகவல் கொடுத்ததுடன், அவர்களும் தங்கள் வாகனங்களில் அந்த காரை விரட்டிச் சென்றதாக குண்டங்சா​ங் மாவட்ட போ​லீஸ் தலைவர் சிமியும் லொமடின் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து அனைத்து ரோந்துப் கார் போ​லீஸ்காரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அந்த ப்ரொத்தோன் பெர்சோனா காரை போ​​லீசார் அடையாளம் கண்டனர்.

ஹைலாக் வாகனத்தில் சென்ற போ​லீஸ் ரோந்து கார், அந்த காரை வழிமறித்ததுடன், காரின் இருக்கையில் அமர்ந்து இருந்த அந்த நபரை வளைத்துப்பிடித்தனர். மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்ட மாணவர்களை போ​லீசார் காரிலிருந்து பாதுகாப்பாக ​மீட்டனர்.

Related News