May 20, 2026
Thisaigal NewsYouTube
புகையிலைத் தயாரிப்புகள் கட்டுப்பாடுச் சட்டம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது !
தற்போதைய செய்திகள்

புகையிலைத் தயாரிப்புகள் கட்டுப்பாடுச் சட்டம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது !

Share:

பொது சுகாதாரத்திற்காக புகையிலைத் தயாரிப்பு கட்டுப்பாடுச் சட்டம் 2023 இன்று நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்டது.

நேற்று அந்தச் சட்டப் பரிந்துரையை 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்தனர்.

புதிய தலைமைமுறையினர் புகைக்கும் பழக்கத்தை இறுதி செய்யும் வகையில் இந்தச் சட்டம் வழி வகை செய்கிறது.

அதன்படி, 2007 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பது, அவர்கள் புகைப்பது ஆகிய நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தச் சட்டம் பாயும் என நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா விளக்கினார்.

முன்னதாக, இந்தச் சட்டம் விவாதிக்கப்படுவது கைவிடப்பட்ட நிலையில், அமைச்சர் சலிஹா பல்வேறு விமர்சனத்திற்கு ஆளானார்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பலர் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் எனக் கருத்துரைத்த பிறகு, அது இப்பொழுது அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

Related News