பினாங்கு மாநிலத்தில் எல் ஆர் டி திட்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட ஒரு குத்தகையை வழங்கியுள்ளது எம்ஆர்டி கோப்ரேஷன் எஸ்டிஎன்பிஎச்டி
இவ்விவகாரம் குறித்து தகவல் அளித்த பினாங்கு மாநில அடிப்படை வசதி, தொடர்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் சைரில் கிர் ஜொஹாரி குறிப்பிடுகயில், இந்த ஆய்வின் விரிவான தகவல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறதாகத் தெரிவித்தார்.
மேலும், போக்குவரத்து அமைச்சின் பரிசீலனையில் இந்தத் திட்டம் தற்போது இருப்பதாகவும், அதற்கான செலவு, செயலாக்க முறை, திட்ட செயலாக்கத்தின் கால அவகாசம் ஆகியவை அமைச்சின் முடிவில் அடங்கி இருப்பதாகவும் சைரில் கிர் ஜொஹாரி கூறினார்.
செபராங் பிறையை இணைக்கும் பினாங்கு மாநில எல் ஆர் டி திட்டத்திற்கு 10 பில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டை மத்திய அரசாங்கம் அறிவித்திருப்பது இம்மாநில மக்களின் நலனுக்காக பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் மட்டும் இல்லாமல், மாநிலப் பொருளாதாரத்தையும் வளப்படுத்தும் என்றார் அவர்.








