பெந்தோங், டிசம்பர்.05-
காரினால் மோதப்பட்ட பெண் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 12.50 மணியளவில் பெந்தோங், ஜாலான் பெந்தோங் - ரவூப் சாலையின் 3 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
26 வயது தெங்கு அய்டா நஸுரா என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததாக போலீசார் அடையாளம் கூறினர்.
தலையிலும் உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளான அந்தப் பெண்மணி சம்பவ இடத்திலேயே மாண்டதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஸைஹாம் முகமட் கஹார் தெரிவித்தார்.








