பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.17-
அக்டோபரில் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டத்தில், காவல்துறையின் D11 எனப்படும் பாலியல், பெண்கள், குழந்தைகள் விசாரணைப் பிரிவுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸா அன்வார் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். தனது அண்மைய வருகையின் போது, போதிய வசதிகள் இல்லாமல் அந்தப் பிரிவு சிரமப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அவர்களின் கடினமானப் பணியைப் பாராட்டிய அவர், குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால், இந்தப் பிரிவுக்குப் புதிய கருவிகளும் கூடுதல் அதிகாரிகளும் அவசியம் என்றார். குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறைகள் குறித்த அண்மைய நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டி, சமூகத்தில் அவர்களின் பாதுகாப்புக்கு உடனடி கவனம் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.








