கோலாலம்பூர், நவம்பர்.05-
தைவான் நாட்டைச் சேர்ந்த பிரபல ஊடகப் பிரபலம் 31 வயது பெண் ஒருவர் கோலாலம்பூரில் உள்ள ஹோட்டலில் கொலை செய்யப்பட்டது தொடர்பில் உள்ளூரைச் சேர்ந்த ரேப் பாடகர் Namewee- கைது செய்யப்பட்டு 6 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட தைவான் பெண், கடந்த அக்டோபர் 22 ஆம் ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் கொன்லேயில் உள்ள ஒரு ஹோட்டலின் குளியல் அறையில் இறந்து கிடந்த சம்பவத்தைத் தொடர்ந்து 42 வயதுடைய ரேப் பாடகர் Namewee, போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.
அந்த ஊடகப் பிரபலத்தை ஹோட்டலில் ஆகக் கடைசியாகச் சென்று பார்த்தது ரேப் பாடகர் Namewee என்று அடையாளம் கூறப்பட்டது. இன்று காலையில் போலீசாரிடம் சரண் அடைந்த Namewee பின்னர் ஜாலான் டூத்தாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு, போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாலீ அடாம் தெரிவித்தார்.








