கோலாலம்பூர், செப்டம்பர்.29-
சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைமை ஆணையர் டத்தோ ஃபாடில் மர்சுஸ் தெரிவித்துள்ளார்.
ஓப்ஸ் பியுயு என்ற பெயரிலான சட்ட இணக்க நடவடிக்கையின் போது, வாகனமோட்டிகளுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த அபராதம் மற்றும் சட்ட நோட்டீசுகள் இனி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக எச்சரிக்கை விடுப்பதற்குப் பதிலாக நேரடியாக அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஃபாடில் மர்சுஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் ஓப்ஸ் பியுயு நடவடிக்கையில், இதுவரையில் 60,596 எச்சரிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.








