Oct 9, 2026
Thisaigal NewsYouTube

Kyrgyz குடியரசின் அதிபர் Sadyr Zhaparow மலேசிய வருகை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
Kyrgyz குடியரசின் அதிபர் Sadyr Zhaparow மலேசிய வருகை

புத்ராஜெயா, ஜூன்.25-

மத்திய ஆசிய நாடான Kyrgyz குடியரசின் அதிபர் Sadyr Zhaparow, மலேசியாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார். வட உஸ்பெகிஸ்தான் அருகில் வீற்றிருக்கும் நாடான Kyrgyz குடியரசு, முன்பு Kyrgyzstan என்ற பெயரில் விளங்கிய நாடாகும்.

Kyrgyz குடியரசின் அதிபர் Sadyr Zhaparow-வின் வருகையையொட்டி புத்ராஜெயா, பெர்டானா புத்ராவில் அவருக்கு மகத்தான வரவேற்பு நல்கப்பட்டது. அதிபர் Sadyr Zhaparow-வை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர்கொண்டு வரவேற்றார்.

Kyrgyz குடியரசுக்கும் மலேசியாவுக்கும் இடையில் வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சாரம், மனிதநேயம் மற்றும் பரஸ்பரம் தொடர்புள்ள பிற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →