Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தோட்டத் தொழிலாளர்களுக்கு மலிவு விலை வீடுகள்
தற்போதைய செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கு மலிவு விலை வீடுகள்

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அதிகம் தோட்டங்களைக் கொண்ட பகாவ் பகுதியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மலிவு விலை வீடுகளைக் கட்டுவற்கு மாநில அரசு திட்டம் வகுத்துள்ளதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினரக்சியூவ் செ யொங் தெரிவித்துள்ளார்.


நேற்று நெகிரி செம்பிலான் மாநில அரசு அலுவலகத்தில் நடைபெற்ற மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், மனித வள துறை அமலாக்க அதிகாரிகள், நெகிரி செம்பிலானில் உள்ள 32 தோட்டங்களின் நிர்வாகிகள் மற்றும் அரசாங்க அமலாக்க அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் போது மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இந்த தகவலை தெரிவித்ததாக மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க செயலாளர் சாந்தகுமார் பச்சையப்பன் கூறினார்.

ஒரு தோட்டம் மேம்பாடு காணும் போது தோட்டத் தொழிலாளர்களுக்கு கட்டாயம் சொந்த வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு நடப்பு சட்டத்தில் இடம் உண்டு. அந்த வகையில் பகாவ் வட்டாரத்தில் ஒரு வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கும் பொருட்டு தோட்டத் தொழிலாளர்களின் தரவுகள் சேகரிக்குமாறு மாநில அரச பரிந்துரை செய்துள்ளது.

அந்த கணக்கெடுப்பபில், எத்தனை தோட்டத் தொழிலாளர்களுக்கு மலிவு விலை வீடுகள் தேவை என்பது குறித்து மாநில அரசிடம் மகஜர் வழங்கப்படும் என்று சாந்தகுமார் பச்சையப்பன் தெரிவித்தார்.
தவிர தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார சுமையைக் குறைக்க தோட்டங்கள் தோறும் பச்சை புத்தகத் திட்டத்தை விரைந்து அமல்படுத்துமாறு தாம் கேட்டுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News