நடப்பு அரசாங்கம், 54 ஆயிரம் சீனப்பிரஜைகளுக்கு மலேசிய குடியுரிமையை வழங்கியுள்ளதாக கூறியிருக்கும் பாஸ் கட்சிக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்படும் என்று பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரமி ரபிஸி தெரிவித்துள்ளார். நடப்பு அரசாங்கத்திற்கு எதிராக அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பாஸ் கட்சியை போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்ற நோக்கில் கட்சி உறுப்பினர்கள் இது குறித்து போலீசில் புகார் செய்வார்கள் என்று அவர் குறிப்பிட்டார். பாஸ் கட்சியின் இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டு மிகப்பெரிய அவதூறாகும். மக்கள் மத்தியில் ஆத்திரத்தை தூண்டிவிடுவதற்கு வேண்டுமென்றே இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ள பாஸ் கட்சிப் பொறுப்பாளர்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று பொருளாதார அமைச்சருமான ரபிஸி ரம்லி குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


