அடுத்த மாதம் நவம்பரில் மழைக்காலம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மழைகாலத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியம் உள்ளதால் அதனை எதிர்கொள்வதற்கு தற்காப்பு அமைச்சும், மலேசிய இராணுவப்படையும் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வெள்ளம் ஏற்படும் பகுதிகள் குறிப்பாக ஆபத்து நிறைந்த பகுதிகளில் இராணுவத்தினர் தங்கள் தடவாடங்களை கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொண்டு வருவதாக அது தெரிவித்துள்ளது.








