Oct 15, 2026
Thisaigal NewsYouTube

ஜோகூரில் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜோகூரில் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து

ஜோகூர் மாநிலம், பாசீர் கூடாங் பகுதியில் உள்ள கம்போங் பாசீர் பூத்தே, ஜாலான் முஹிபா குப்பைக் கிடங்கில் நேற்று இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் இன்று அதிகாலை வரை நீடித்தன.

இது தொடர்பாக நேற்று இரவு 10.04 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக ஜோகூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு அருகில் நீர் விநியோக வசதி இல்லாததால், தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது.

இதனால், சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் இருந்த நீரேற்றுக் குழாய்க்குச் சென்று தீயணைப்பு வாகனங்களில் தண்ணீரை நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேவேளையில் தீயைக் கட்டுப்படுத்த கடல் நீரும் பயன்படுத்தப்பட்டது. இன்று அதிகாலை 5.33 மணிக்கு, தீயணைப்புப் பணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதுவரை இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ காயமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
வீடுகள், தொழிற்துறைகளுக்கு தனித்தனி மின்சாரக் கட்டண விகிதங்கள் நிர்ணயம்: அரசாங்கம் பரிசீலனை

வீடுகள், தொழிற்துறைகளுக்கு தனித்தனி மின்சாரக் கட்டண விகிதங்கள் நிர்ணயம்: அரசாங்கம் பரிசீலனை

ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

ஜாலான் கூச்சிங் 6 வாகனங்கள் மோதிய விபத்து: 24 வயது ஓட்டுநர் விசாரணை கோரினார்

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்