Aug 12, 2026
Thisaigal NewsYouTube
கிலோ கஞ்சா பூக்களைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

கிலோ கஞ்சா பூக்களைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு

Share:

கோலாலம்பூர், மே.26-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் அஞ்சல் மற்றும் பொருள் பட்டுவாடா மையத்தில் கடந்த மே 5ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் கஞ்சா பூக்களைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையின் வாயிலாக 14 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புள்ள 13.74 கிலோ கிராம் கஞ்சா பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அரச மலேசிய சுங்கத் துறையின் பகாங் மாநில இயக்குநர் முகமட் அஸ்ரி செமான் தெரிவித்தார்.
அண்டை நாடுகளிலிருந்து போதைப் பொருட்களைப் பெற்று மலேசியாவில் பொட்டலமிட்டு பின்னர் கேஎல்ஐஏ வழியாகக் கூரியர் நிறுவனங்களைப் பயன்படுத்தி பிற நாடுகளுக்கு அனுப்புவதே சம்பந்தப்பட்ட கும்பலின் கடத்தல் பாணியாகும் என நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News