Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தாய் சாய்  சூதாட்டம், முதியர் உட்பட 23 பேர் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

தாய் சாய் சூதாட்டம், முதியர் உட்பட 23 பேர் பிடிபட்டனர்

Share:

பந்தயப் பணம் வைத்து, தாய் சாய் பகடைக்காய் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 90 வயது முதியவர் உட்பட 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த தாய் சாய் ஆட்டத்தில் பந்தயப் பணமான 26 ஆயிரத்த 112 வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று பினாங்கு, பாயான் லாப்பாஸ், ஜாலான் சுங்ஙை ஆராவில் உள்ள திறந்த வெளிப்பபகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்த அனைவரும் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் கமாருல் ரிசால் ஜெனால் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டவர்களை கூண்டோடு பிடிப்பதற்கு முன்னதாக அவர்களின் நடவடிக்கையை போலீசார் கடந்த நான்கு நாட்களாக அணுக்கமாக கண்காணித்து வந்ததாக அவர் மேலும் கூறினார்.

Related News