Sep 24, 2026
Thisaigal NewsYouTube
கோலா கங்சாரில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்: இருவர் கைது
தற்போதைய செய்திகள்

கோலா கங்சாரில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்: இருவர் கைது

Share:

கோலா கங்சார், கம்போங் சே காதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில், 49 வயது பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி பிற்பகல் 2.38 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கோலா கங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் ஹேய்ஷாம் ஹாருன் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் பெண் ஒருவர் வீட்டின் வரவேற்பறையில், ரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி கிடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தி ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண்ணுக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதலே சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக விசாரணை நடைபெற்று வருகின்றது.

Related News