கோலாலம்பூர், செப்டம்பர்.10-
வரும் பொதுத் தேர்தலில் பிகேஆர் மற்றும் அம்னோ உட்பட மலாய்க்காரர்களை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு கட்சியுடனும் அரசியல் ஒத்துழைப்பு கொள்வதற்கு பாஸ் கட்சி தயாராக இருப்பதாக அதன் உதவித் தலைவர் டத்தோ இட்ரிஸ் அஹ்மாட் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பதே பாஸ் கட்சியின் வியூகமாகும். அரசியல் ஒத்துழைப்பு கொள்வது தொடர்பில் எந்தவொரு கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாஸ் கட்சி, தனது கதவை மூடியது கிடையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனத்தையும், சமயத்தையும் வலுப்படுத்துவதே பாஸ் கட்சியின் பிரதான நோக்கமாகும். எனவே முஸ்லிம் கட்சிகளுடன் கைக்கோர்ப்பதில் பாஸ் கட்சிக்கு பிரச்னை கிடையாது என்று டத்தோ இட்ரிஸ் கூறினார்.








