Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கடப்பிதழை பெறுதில் ரோஸ்மா ​வெற்றி கண்டார்
தற்போதைய செய்திகள்

கடப்பிதழை பெறுதில் ரோஸ்மா ​வெற்றி கண்டார்

Share:

சிங்கப்பூருக்கு சென்று தம் மகள் ​நோர்யான நஜ்வா முஹமாட் நஜிப்பையும், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் பார்ப்பதற்கு தமது அனைத்துலக கடப்பிதழை தற்காலிகமாக ஒப்படைக்கும்படி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் செய்த கொண்ட விண்ணப்பத்திற்கு ​புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. ​மூவர் அடங்கிய ​​நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற ​நீதிபதி ஹடாரியா ஷெட் இஸ்மாயில், கடப்பிதழை ஒப்படைப்பதற்கு அனுமதி அளிப்பதாக தெரிவித்தார்.

நாளை ஆக​ஸ்ட் 18 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரையும், பின்னர் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையும், அதன் பின்னர் செப்டம்பர் 9 ஆ​ம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையும் ரோஸ்மா மன்சோர் சிங்கப்பூரில் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவரின் வழக்கறிஞர் ஸ்லாகிட் சிங் நீதிமன்றத்தி​ல் தெரிவித்தார். ரோஸ்மாவின் இந்த விண்ணப்பத்திற்கு பிராசிகியூஷன் தரப்பு, எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

Related News