May 26, 2026
Thisaigal NewsYouTube
லட்சக்கணக்கான டாலரை லஞ்சமாக பெற்ற பேங்க் நெகாரா முன்னாள் கவர்னர் ஷெட்டியின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? முன்னாள் பிரதமர் நஜீப் கேள்வி
தற்போதைய செய்திகள்

லட்சக்கணக்கான டாலரை லஞ்சமாக பெற்ற பேங்க் நெகாரா முன்னாள் கவர்னர் ஷெட்டியின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? முன்னாள் பிரதமர் நஜீப் கேள்வி

Share:

கோலாலம்பூர், டிச.3-

கோடிக்கணக்கான அமெரிக்க டாலரை பட்டுவாடா செய்வதில் ஒரே நாளில் அங்கீகாரம் வழங்கியது மூலம் 82 லட்சம் அமெரிக்க டாலரை லஞ்சமாக பெற்றதாக கூறப்படும் பேங்க் நெகராவின் முன்னாள் கணவர் டான்ஸ்ரீ ஷெட்டி அக்தார் அஸிஸ் அல்லது அவரின் கணவர் தாவ்பிக் அய்மான் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கேள்வி எழுப்பினார்.

கோடிக்கணக்கான டாலரை பட்டுவாடா செய்வதில் மத்திய வங்கியான பேங்க்நெகராவின் அங்கீகாரம் அவ்வளவு எளிதாக கிடைக்காது.ஆனால், நாட்டின் மத்திய வங்கியின் கவனர் என்ற முறையில் ஷெட்டி அக்தார் அஸிஸ் தமது பதவியைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கான டாலரை பட்டுவாடா செய்வதில் ஒரே இரவில் அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.

அதற்கு கைமாறாக ஷெட்டி அக்தார் அஸிஸ் அல்லது அவரது கணவர் தாவ்பிக் அய்மான் 82 லட்சம் அமெரிக்க டாலரை லஞ்சமாக பெற்றுள்ளார் என்று 1எம்டிபி நிதி முறைகேடு வழக்கு விசாரணையில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக தமது தற்காப்பு வாதத்தில் சாட்சியம் அளிக்கையில் நஜீப் மேற்கண்ட விவரத்தை அம்பலப்படுத்தினார்.

பெரிய தொகையை பட்டுவாடா செய்வதற்கு பேங்க் நெகாராவிலிருந்து ஒரே இரவில் அங்கீகாரம் வழங்கி தந்ததற்காக தேடப்பட்டு வரும் ஜோ லோ மூலமாக ஷெட்டி அக்தார் அஸிஸின் கணவர் 82 லட்சம் அமெரிக்க டாலரை லஞ்சமாக பெற்றுள்ளார் என்று நஜீப் குற்றஞ்சாட்டினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு