பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் அமைந்து ஓராண்டு நிறைவுபெறகிறது. இதனையொட்டி இன்று மாலையில் புத்ராஜெயா, கொம்ப்லெக்ஸ் பெர்படானான் புத்ராஜயா, டேவான் ஶ்ரீ சியாந்தானில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் பிரதமர் கலந்து சிறப்பித்தார்.
நிதி அமைச்சருமான பிரதமருடன், அரசாங்க செயலாளர் டான்ஸ்ரீ முஹமாட் அலி சுக்கி மற்றும் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹுசெயின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதான மண்டபத்திற்குள் பிரதமர் நுழைந்த போது அனைவரும் எழுந்து நின்று பிரதமரை உற்சாகத்துடன் வரவேற்றனர். விருந்து உபசரிப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக், பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி உட்பட பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.








