Dec 2, 2025
Thisaigal NewsYouTube
FLYsiswa திட்டத்தில் 118,786 மாணவர்கள் பயன் பெற்றுள்ளார்
தற்போதைய செய்திகள்

FLYsiswa திட்டத்தில் 118,786 மாணவர்கள் பயன் பெற்றுள்ளார்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.27-

உயர்க்கல்விக்கூட மாணவர்களுக்குச் சலுகைக் கட்டணம் அடிப்படையில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய FLYsiswa எனும் விமானப் பயணத் திட்டத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 786 மாணவர்கள் பயன் பெற்றுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், மக்களவையில் தெரிவித்துள்ளார்.

விமானப் பயணத்திற்கான சலுகைக் கட்டணத் திட்டத்தில் உயர்க்கல்விக்கூடங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 632 மாணவர்கள் பயன் பெற்றுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட FLYsiswa திட்டத்தில் இவ்வாண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி வரை அதிகமான மாணவர்கள் பயன் பெற்று இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

தீபகற்ப மலேசியாவிற்கும், சபா, சராவாவிற்கும் இடையிலான விமானப் பணத்திற்காக அரசாங்கம் ஏற்படுத்திய FLYsiswa திட்டம் தொடர்பில் துவாரான் எம்.பி. Datuk Serri Wilfires Madius Tangau, மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமான பதிலில் அந்தோணி லோக் இதனைத் தெரிவித்தார்.

தீபகற்ப மலேசியாவிலும், சபா, சரவா மாநிலங்களிலும் உள்ள உயர்க்கல்விக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கும், மீண்டும் தங்கள் கல்வி வளாகங்களுக்குச் செல்வதற்கும் உதவித் தொகை அடிப்படையில் அரசாங்கம் FLYsiswa திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக அந்தோணி லோக் தெளிவுப்படுத்தினார்.

Related News