Oct 12, 2026
Thisaigal NewsYouTube

போப் பிரான்சிஸ் மறைவு- பல ஆயிரம் மக்கள் முன் தோன்றி ஈஸ்டர் வாழ்த்து கூறிய மறுநாளே சோகம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போப் பிரான்சிஸ் மறைவு- பல ஆயிரம் மக்கள் முன் தோன்றி ஈஸ்டர் வாழ்த்து கூறிய மறுநாளே சோகம்

வத்திகன், ஏப்ரல்.21-

போப்பாண்டவர் பிரான்சிஸ் மறைவு, உலகத்தில் உள்ள கிறிஸ்துவ மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 88 வயதான போப்பாண்டவர் பிரான்சிஸ் இன்று திங்கட்கிழமை காலையில் உயிர் நீத்தார்.

போப்பாண்டவர் பெனடிக்ட் பதவி விலகிய பின்னர், கடந்த 2013 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த Jorge Bergoglio எனும் இயற்பெயரைக் கொண்ட பிரான்சிஸ், போப்பாண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும், அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது" என்று Cardinal Farrel கூறினார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மக்களுக்கு "ஈஸ்டர் வாழ்த்துகள்" தெரிவிக்க செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் அவர் தோன்றிய 24 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ்ந்துள்ளது.

சக்கர நாற்காலியில் வந்த போப் பால்கனியில் இருந்தபடி, ஆரவாரம் செய்த கூட்டத்தை நோக்கி கையசைத்து, "அன்புள்ள சகோதர சகோதரிகளே, ஈஸ்டர் வாழ்த்துகள்" என்று கூறினார்.

மறைந்த போப்பாண்டவர் பிரான்சிஸ், கத்தோலிக்க திருச்சபையில் பல மாற்றங்களை முன்னெடுத்தவர். அதே நேரத்தில், பழமையான நிகழ்வுகள் தொடர வேண்டும் என்று கருதும் பாரபரியமிக்கவர்கள் மத்தியில் இவர் பிரபலமாக இருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கோலாலம்பூர் வணிக வளாகத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ் துறை

கோலாலம்பூர் வணிக வளாகத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ் துறை

புகைமூட்டம்: மாணவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் – கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் வலியுறுத்தல்

புகைமூட்டம்: மாணவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் – கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் வலியுறுத்தல்

சபாவில் இளைஞரைத் தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம்: 29 வயது சந்தேக நபர் கைது

சபாவில் இளைஞரைத் தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம்: 29 வயது சந்தேக நபர் கைது

டாக்ஸி, பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி: அக்டோபர் 14 முதல் விநியோகம்

டாக்ஸி, பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி: அக்டோபர் 14 முதல் விநியோகம்

பெர்லிஸ் எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவும் 25 ரகசியப் பாதைகள் கண்டுபிடிப்பு: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிஸ் எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவும் 25 ரகசியப் பாதைகள் கண்டுபிடிப்பு: நாடாளுமன்றத்தில் தகவல்

கேபிள் துண்டிக்கப்பட்டதால் கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பாதிப்பு

கேபிள் துண்டிக்கப்பட்டதால் கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பாதிப்பு