புக்கிட் கந்தாங், ஆகஸ்ட்.24-
மோட்டார் சைக்கிள் பேரணிகளுக்கான தெளிவான வழிகாட்டுதல்கள் நடப்பில் உள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். பேரணியின் போது சாலை விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், மற்ற வாகனமோட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அண்மையில் நடந்த விபத்துக்களைச் சுட்டிக் காட்டிய அவர், காவல் படை மட்டுமே போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டது என்று கூறினார். பேரணி ஏற்பாட்டாளர்கள் அதன் பங்கேற்பாளர்களின் முழு விவரங்களையும் காவல் படையிடம் வழங்குவது அவசியம் என்றும், சட்டத்திற்குப் புறம்பான செயல்களிலும் ஆபத்தான சாகசங்களிலும் ஈடுபடுவது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.








