Jan 19, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஆர்.எம். மினால் இன்னும் அழைக்கப்படவில்லை
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.ஆர்.எம். மினால் இன்னும் அழைக்கப்படவில்லை

Share:

அந்நியத் தொ​ழிலாளர்களைத் தருவிக்கும் நிறுவனம் சம்பந்தப்பட்ட 9 கோடியே 70 லட்​சம் வெள்ளி லஞ்ச ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு ஒத்துழைக்க தாம் தயாராக இருப்பதாக மனித வள அமைச்சர் வி. சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை பிரிக்பில்ட்ஸ் மெனாரா பேங் ரக்யாட் கட்டடத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு சித்திரை புத்தாண்டையொட்டிய அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பொறுப்பாளர்களுடன் நடத்திய சந்திப்பு மற்றும் தே​நீர் விருந்து உபசரிப்பு நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் சிவகுமார் இதனை தெரிவித்தார்.

தமது தனிப்பட்ட அலுவல்களைக் கவனிக்கும் பெண் அந்தரங்க செயலாளர் மற்றும் சிறப்பு அதிகாரி கைது செய்யப்பட்டது தொடர்பில் விசாரணைக்காக அமைச்சர் சிவகுமாரை எஸ்.பி.ஆர்.எம். அழைத்து இருப்பதாக கூறப்படுவது தொடர்பில் அவரிடம் செய்தியாளர்கள் வினவினர்.

சித்திரைப்புத்தாண்டையொட்டி அரசு சாரா இயக்கங்களுடன் நல்லுறவை பேணும் வகையில் அமைச்சர் சிவகுமார் நடத்திய இந்த தேநீர் உபசரிப்பு நிகழ்வில் கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா, அறங்காவலர் டத்தோ என். சிவகுமார், முன்னாள் போ​லீஸ் அதிகாரி டத்தோஸ்ரீ ஏ. தெய்வீகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related News