கோலாலம்பூரில் பேருந்து நிறுத்தங்களை அமைக்கவும், மேம்படுத்தவும் கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல்- க்கு போக்குவரத்து அமைச்சு கூடுதலாக 1.5 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது. முறையான பேருந்து நிறுத்த வசதிகள் இல்லை என்ற பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
சிகாம்புட் உத்தாரா ரயில் நிலையத் தொடக்க விழாவில் பேசிய அந்தோணி லோக்,"நகரவாசிகள் சாலையோரங்களில் காத்திருக்கும் நிலையை மாற்றவே இந்த நிதி" என்றார்.
ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் 100 பேருந்து நிறுத்தங்கள் மேம்படுத்தப்படும். பினாங்கு மாநிலத்தை விட வேகமாக, அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த திட்டத்தை டிபிகேஎல் முடிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.








