Sep 27, 2026
Thisaigal NewsYouTube
செராஸ் கலவரம்: 33 பேருக்கு 10 மாத சிறைத் தண்டனை - உயர் நீதிமன்றம் அதிரடி
தற்போதைய செய்திகள்

செராஸ் கலவரம்: 33 பேருக்கு 10 மாத சிறைத் தண்டனை - உயர் நீதிமன்றம் அதிரடி

Share:

கோலாலம்பூர், செராஸ் பகுதியில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்ட 33 பேருக்கு, கோலாலமபூர் உயர் நீதிமன்றம் தலா 10 மாத சிறைத் தண்டனை விதித்தது.

கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்களுடன் தாக்குதல் நடத்தியதற்காக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னதாக, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இவர்களுக்கு தலா 3,000 வெள்ளி அபராதம் மட்டும் விதித்திருந்தது.

இந்தத் தண்டனை மிகக் குறைவு எனக் கருதிய உயர் நீதிமன்ற நீதிபதி அஸ்லாம் சைனுதீன், ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராதத்துடன் கூடுதலாக 10 மாத சிறைத் தண்டனையை விதித்தார். குற்றவாளிகளில் ஒருவரான ஏ. கணேசன் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவருக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related News