கோலாலம்பூர், நவம்பர்.28-
பத்துகேவ்ஸ் வட்டாரத்தில் நேற்று இரவு, ஆயுதத்தினால் மூவரைத் தாக்கியதாக நம்பப்படும் ஒரு கும்பல போலீசார் தேடி வருவதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் அரிஃபின் முகமட் நாசீர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நள்ளிரவு 12.20 மணியளவில் போலீசார் தகவல் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கைகலப்பு சுமார் பத்து நிமிடம் நீடித்துள்ளது. இதில் இரு கும்பல்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்தக் கைகலப்பில் காயமுற்ற 18 க்கும் 38 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூவர் தற்போது செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக ஏசிபி நோர் அரிஃபின் குறிப்பிட்டார்.








