நேற்று ஜுன் 5 ஆம் தேதி தமது 100 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய திருமதி கமலாதாஸிற்கு மாமன்னர் சுல்தான் அப்துலலா தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
கடந்த 1923 ஆம் ஆண்டு ஜுன் 5 ஆம் தேதி பேரா, தாப்பாவில் பிறந்து வளர்ந்தவரான திருமதி கமலாதாஸ், முன்னாள் விளையாட்டுத்துறை எழுத்தாளர் டத்தோ ஜோர்ஜ் டாஸ்ஸின் தாயார் ஆவார்.
மிகச்சிறப்பான ஒரு நாளில் தமது 100 ஆவது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ள கமலாதாஸ் தொடர்ந்து உடல் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை பிரார்த்திப்பதாக சுல்தாான் அப்துல்லா தெரிவித்தார்.
நாட்டின் மேன்மைக்கு உழைத்த மூத்த குடிமக்கள் தொடர்ந்து மதிக்கப்பட வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


