சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் புரோகிராம் பெஜானா கெர்ஜாயா 2.0 திட்டத்தில் மோசடி செய்த குற்றத்திற்காக நிறுவன இயக்குநர் ஒருவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 50 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
ஷரிகாட் ஸ்டார் ஸ்கீல் சென்டிரியான் பெர்காட் நிறுவனத்தின் உரிமையாளருமஇயக்குநருமான 54 வயது எஸ். ராதா என்ற அந்த இந்திய மாது, கோவிட் 19 காலகட்டத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறு பயிற்சி அளித்து வேலைக்கு சேர்த்துக்கொண்டதைப் போல போலியான ஆவணங்களை சமப்பித்து தமது நிறுவனம் சார்பில் சொக்சோவிடமிருந்து 31 ஆயிரத்து 200 வெள்ளிப் பணத்தை பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
ராதா, இக்குற்றத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் கோலாலம்பூர் ஜாலான் துன் ரசாக்கில் உள்ள விஸ்மா பெர்கேசோ தலைமை அலுவலகத்தில் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தனக்கு எதிராக குற்றத்தை ராதா ஒப்புக்கொண்டா். இதனை தொடர்ந்து ராதாவிற்கு விதிக்கப்படவிருந்த இரண்டு மாத சிறைத்தண்டனை தவிர்க்க அவருக்கு 50 ஆயிரம் வெள்ளி அபராதத் தொகையை நீதிபதி சூஸானா ஹுசேன் பிறப்பித்தார்.
தம்மிடம் 12 தொழிலாளர்கள் வேலைக்கு சேர்ந்ததாக சொக்சோவிடம் ராதா சமர்ப்பித்த பெயர் பட்டியல் உண்மையில்லை என்றும் அந்த 12 தொழிலாளர்கள் ராதாவிற்கு சொந்தமான ஷரிகாட் ஸ்டார் ஸ்கீல் சென்டிரியான் பெர்காட் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


