காஜாங், செப்டம்பர்.28-
சில்க் நெடுஞ்சாலையில் உள்ள புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நேற்று நிகழ்ந்த பயங்கர லாரி விபத்து தொடர்பாக 42 வயது லாரி ஓட்டுநர் இரண்டு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காஜாங் மாவட்டக் காவற்படைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்தார். பிரேக் கோளாறு ஏற்பட்டதை அறிந்ததும், விபத்துக்கு முன் லாரி ஓட்டுநர் வாகனத்திலிருந்து குதித்ததாக ஒப்புக் கொண்டார். இந்த விபத்தில் 16 மாத ஆண் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்தச் சம்பவம் குறித்துக் காவற்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








