ஜோகூர், கூலாயில் தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங் தலைகீழாக பறக்கவிடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை உடனடியாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, தொழிற்சாலையின் செயல்பாடுகளை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசியக் கொடியை முறையாகவும் மரியாதையுடனும் காட்சிப்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.








