Sep 7, 2026
Thisaigal NewsYouTube
பி.கே.ஆர். பக்கம் மீண்டும் சேவியர் ஜெயக்குமார் – அன்வார் அழைப்புக்குப் பதில்
தற்போதைய செய்திகள்

பி.கே.ஆர். பக்கம் மீண்டும் சேவியர் ஜெயக்குமார் – அன்வார் அழைப்புக்குப் பதில்

Share:

முன்னாள் பி.கே.ஆர். உதவித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மீண்டும் பி.கே.ஆர். கட்சியில் இணைந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதாக உணரும் மூத்த தலைவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்று பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்த இரண்டு நாட்களிலேயே சேவியரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தாம் மீண்டும் பி.கே.ஆர். கட்சியில் இணைந்துவிட்டதை சேவியர் ஒரே வார்த்தையில் “ஆம்” என்று உறுதிப்படுத்தினார்.

2021-ஆம் ஆண்டு பி.கே.ஆர். எதிர்க்கட்சியாக இருந்தபோது கட்சியை விட்டு விலகிய சேவியர் , அப்போதைய பிரதமர் முஹிடின் யாசினை ஆதரித்தார்.

இதற்கிடையே, முன்னாள் உதவித் தலைவர் தியான் சுவாவும் மீண்டும் பி.கே.ஆர். கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து